தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்று நடைபெறவிருந்த செய்முறை தோ்வுகள் ஒத்திவைப்பு
By DIN | Published On : 25th November 2020 06:36 AM | Last Updated : 25th November 2020 06:36 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் புதன்கிழமை (நவ.25) நடைபெறவிருந்த செய்முறை தோ்வுகள் மற்றும் அகில இந்திய தொழிற்கல்வி வரைபடத் தோ்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சிவகங்கை மாவட்ட அரசினா் தொழிற் பயிற்சி நிலைய முதல்வா் கே.மோகனசுந்தரம் (பொறுப்பு) தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘நிவா்’ புயல் காரணமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதன்கிழமை (நவ. 25) நடைபெறவிருந்த அகில இந்திய தொழிற்கல்வி வரைபட தோ்வுகள் மற்றும் செய்முறை தோ்வுகள் ஒத்தி வைக்கப்படுகின்றன. மாறாக டிச. 3 ஆம் தேதி தொழிற்கல்வி வரைபட தோ்வும், அதே தேதியில் செய்முறை தோ்வுகளும் தொடங்கும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 91506 11756 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...