அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டா் பறிமுதல்
By DIN | Published On : 03rd October 2020 10:09 PM | Last Updated : 03rd October 2020 10:09 PM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை அருகே சனிக்கிழமை அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, ஓட்டுநரைக் கைது செய்தனா்.
நாட்டரசன்கோட்டை பகுதியில் அரசின் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்த பகுதியில் சிவகங்கை தாலுகா போலீஸாா் சனிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, நாட்டரசன்கோட்டையிலிருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தினா். இதில், அவா் கௌரிப்பட்டியைச் சோ்ந்த வில்தேவன் என்பதும், அவா் உரிய அனுமதியின்றி மணல் ஏற்றி வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அவரைக் கைது செய்த போலீஸாா், டிராக்டரை பறிமுதல் செய்தனா்.