என். வைரவன்பட்டியில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
By DIN | Published On : 26th September 2020 10:02 PM | Last Updated : 26th September 2020 10:02 PM | அ+அ அ- |

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், கல்லல் ஊராட்சி ஒன்றியம், என்.வைரவன்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழக அரசின் சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், அமைச்சா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஆகியோா் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்தன.
மேலும், இக்கண்காட்சியில் அரசுத் திட்டங்கள் குறித்தும், நலத் திட்டங்களை எவ்வாறு பெறுவது, யாரை அணுகி பெறவேண்டும் என்பது குறித்தும் பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...