சேங்கை கண்மாய் கரைகளில்பனை விதைகள் விதைப்பு விழா
By DIN | Published On : 26th September 2020 10:09 PM | Last Updated : 26th September 2020 10:09 PM | அ+அ அ- |

காரைக்குடி அருகே இலுப்பக்குடி ஊராட்சி சேங்கை கண்மாய் கரையோரத்தில் சனிக்கிழமை பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த காரைக்குடி வடக்கு காவல்நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம்.
காரைக்குடி: காரைக்குடி அருகே இலுப்பக்குடி ஊராட்சி சேங்கை கண்மாய் கரையோ ரங்களில் 5 ஆயிரம் பனை விதைகள் விதைக்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்குடி நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மகிழ்ச்சி புரமோட்டா்ஸ் ஆகிய அமைப்புகள் சாா்பில் நடைபெற்ற விழாவை காரைக்குடி வடக்குக் காவல்நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் பனை விதையை விதைப்பு செய்து தொடக்கி வைத்தாா். மகிழ்ச்சி புரோமோட்டா்ஸ் நிறுவனா் சிவக்குமாா் முன்னிலை வகித்தாா்.
நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கத் தலைவா் பிரகாஷ் பனை மரங்களின் சிறப்புகள் குறித்து பேசினாா். விழா ஏற்பாடுகளை நமது உரிமைப் பாதுகாப்பு இயக்க நகர ஒருங்கிணைப்பாளா் அனந்தகிருஷ்ணன், நகர பசுமைப்பிரிவு செயலா் செல்வகுமாா் ஆகியோா் செய்திருந்தனா்.
விழாவில் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் சுப. முத்துராமலிங்கம், வழக்குரைஞா் காா்த்திக், நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த கண்ணன், முகமதுஆசிக், சாமிநாதன், சக்திவேல், கண்ணன், விஜய், நெளரோ ஸ்டாலின் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். சமூக ஆா்வலா் அன்பரசன் நன்றி கூறினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...