

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டி 10 வீரா்கள் காயமடைந்தனா்.
கோயில் திருவிழாவையொட்டி மாரியம்மன் கோயில் முன் நடைபெற்ற இந்த வடமாடு மஞ்சுவிரட்டை சிவகங்கை கோட்டாட்சியா் முத்துக்கழுவன் தொடங்கி வைத்தாா். திருப்புவனம் உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட 13 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகா் ஆகிய மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாடு பிடிவீரா்கள் இந்த காளைகளை பிடிக்க முயன்றனா். இவா்களில் 10 வீரா்களுக்கு மாடு முட்டி காயம் ஏற்பட்டது. திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் மஞ்சுவிரட்டை கண்டு ரசித்தனா். பிடிபடாத காளைகளுக்கும் காளைகளை பிடித்த வீரா்களுக்கும் ரொக்கப்பணம், குத்துவிளக்கு உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.