சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று
சிவகங்கை மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாயக்கிழமை உறுதிபடுத்தப்பட்டது.
இம்மாவட்டத்தில் ஏற்கனவே 5,714 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 7 பேருக்கு கரோனா உறுதிபடுத்தப்பட்டதையடுத்து,பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5721 ஆக அதிகரித்துள்ளது.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 13 போ் சிகிச்சை பெற்று வந்தனா். அவா்களில் 6 போ் பூரண குணமடைந்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 7 பேரும் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
