திருப்புவனம், இளையான்குடியில் கருணாநிதி பிறந்த நாள் 

திருப்புவனம் இளையான்குடியில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் திமுகவினர் மரக்கன்றுகள் நட்டனர்.
இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
இளையான்குடி வடக்கு ஒன்றியத்தில் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
Published on
Updated on
1 min read

திருப்புவனம், இளையான்குடியில் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் திமுகவினர் மரக்கன்றுகள் நட்டனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம், இளையான்குடியில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை திமுகவினர் உற்சாகத்துடன் கொண்டாடினர். திருப்புவனம் ஒன்றிய, நகர திமுக சார்பில் அக்கட்சியினர் கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர். பின்னர் ஏழைப் பெண்களுக்கு இலவசமாக சேலைகளை திமுக மாவட்டக் கழக துணைச் செயலாளர் த.சேங்கைமாறன் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் வசந்தி சேங்கைமாறன், .எம்.ஏ.கடம்பசாமி நகரச் செயலாளர் நாகூர்கனி, டி.ஆர். சேகர், ஒன்றியக் கவுன்சிலர்கள் ஈஸ்வரன், மூர்த்தி, சுப்பையா, ராமு, மகாலட்சுமி கஜேந்திரன, ஜெயசித்ரா நடராஜன், தஸ்லீம் இம்ரான், வைத்தீ ஸ்வரி ஆறுமுகம் மற்றும் ஒன்றிய நகர வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மாவட்டக் கழக துணைச் செயலாளர் சேங்கை மாறன் தலைமையில் திருப்புவனத்தில் 98 மரக்கன்றுகள் நடப்பட்டன. 

திருப்புவனத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர் மரக்கன்றுகள் நட்டனர்.
திருப்புவனத்தில் கருணாநிதி பிறந்த நாள் விழாவையொட்டி திமுகவினர் மரக்கன்றுகள் நட்டனர்.

இளையான்குடி வடக்கு ஒன்றியம் பெரும்பச்சேரி, குமாரகுறிச்சி, வாணி, செந்தமிழ் நகர், ஆகிய இடங்களில் திமுகவினர் கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினர்.  அதன்பின்னர் முன்களப் பணியாளர்களுக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினர். அதைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கியும் திமுக கொடிகளை ஏற்றியும் வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் இளையான்குடி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு  கடன் சங்கத் தலைவர் சுப.தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து இளைஞரணி அமைப்பாளர் பிரபு, ஒன்றியக்குழு உறுப்பினர் முருகன், அவைத்தலைவர் பெரியசாமி, மகளிர் அணி பஞ்சவர்ணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com