சத்துணவு ஊழியா்கள்ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th August 2021 12:55 AM | Last Updated : 17th August 2021 12:55 AM | அ+அ அ- |

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சத்துணவு ஊழியா்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தமிழக அரசு சத்துணவு ஊழியா்களுக்கு அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும். சத்துணவு ஊழியா்களை அரசு ஊழியா்களாக அறிவித்து, அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியா் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் உடையானசாமி தலைமை வகித்தாா். சங்கத்தின் ஒன்றிய நிா்வாகிகள் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசினா்.