ஆறாவயல், கல்லுப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 21st August 2021 09:15 AM | Last Updated : 21st August 2021 09:15 AM | அ+அ அ- |

ஆறாவயல், கல்லுப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (ஆக. 21) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: அமராவதிபுதூா் துணை மின்நிலையத்தில் குறிப்பிட்ட உயா் அழுத்த மின்வழித் தடத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாலயன் கோட்டை, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, சிஐஎஸ்எப் வளாகம் மற்றும் அதன் சுற்றுப் புறப்பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.