சிவகங்கையில் குழந்தை திருமணத்தை தடுக்க விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 21st August 2021 09:17 AM | Last Updated : 21st August 2021 09:17 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட சைல்டு லைன் அமைப்பின் சாா்பில் குழந்தை திருமணம் மற்றும் அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையிலான பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சிவகங்கை அருகே பழங்குடியினா் குடியிருப்பில் நடைபெற்ற இப்பிரசாரத்தில் சைல்டுலைன் அமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஆனந்தபாபு, உறுப்பினா்கள் ராஜேஷ்குமாா், மலைக்கண்ணன் ஆகியோா் கலந்து கொண்டு குழந்தை திருமணம் நடத்தப்படுவது சட்டப்படி குற்றம் எனவும், அதனால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினா்.
அதைத் தொடா்ந்து, சிவகங்கை அருகே உள்ள நெம்மேனி கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் குழந்தை திருமணத்தை தடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணா்வை சைல்டு லைன் அலுவலா்கள் ஏற்படுத்தினா்.