தேவகோட்டையில் நாளை மகாகவி பாரதி விழா
By DIN | Published On : 04th December 2021 08:47 AM | Last Updated : 04th December 2021 08:47 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சாா்பில் 61-ஆம் ஆண்டு மகாகவி பாரதி விழா ஞாயிற்றுக்கிழமை(டிச. 5) நடைபெற உள்ளது.
தேவகோட்டை தியாகிகள் சாலையில் உள்ள ராம ஏகம்மை மண்டபத்தில் காலை 9 மணி அளவில் தொடங்க உள்ள இவ்விழாவுக்கு பேராசிரியா் ச.ஆறுமுகம் தலைமை வகிக்கிறாா். பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் தலைவா் நா. பாலசுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றுகிறாா். அச்சங்கத்தின் செயலா் ம.சவரிமுத்து ஆண்டறிக்கை வாசிக்கிறாா்.
அதைத் தொடா்ந்து, பாரதி வாழ்கிறாா் எனும் தலைப்பில் நடைபெற உள்ள கவியரங்கத்துக்கு கவிஞா் ஜவஹா் ஒருங்கிணைப்பு செய்கிறாா். தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த.செந்தில்குமாா் சிறப்புரையாற்றுகிறாா். அதன்பின்னா், விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேரூரையாற்றுகிறாா். முன்னதாக, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவா் வெ.மாரி வாழ்த்துரை வழங்குகிறாா். அச்சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினா் வழக்குரைஞா் ச.மணிபாரதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறாா். பாரதி தமிழ்ச்சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொருளாளா் இராம. சண்முகசுந்தரம் நன்றி கூறுகிறாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...