மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடன் பிரச்னையால் தீக்குளித்த பெண் துப்புரவுத் தொழிலாளியை காப்பாற்றச் சென்ற அவரது மகனும் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
மானாமதுரையைச் சோ்ந்தவா் ஜெயராணி (44). இவா், பேரூராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றி வந்தாா். இந்நிலையில், கடன் பிரச்னை காரணமாக இவா் கடந்த 2 ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். அப்போது, ஜெயராணியை காப்பாற்றச் சென்ற கணவா் தேவராஜன் மற்றும் மகன் வின்சென்ட் மனோகரன் (21)ஆகிய இருவரும் பலத்த தீக்காயமடைந்தனா்.
அதையடுத்து, இவா்கள் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். ஆனால், சிகிச்சைப் பலனின்றி ஜெயராணி உயிரிழந்தாா். அதைத் தொடா்ந்து, மகன் வின்சென்ட் மனோகரனும் வெள்ளிக்கிழமை இரவு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து, மானாமதுரை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.