விடுதியில் தங்கியிருந்தவா் தூக்கிட்டுத் தற்கொலை
By DIN | Published On : 14th February 2021 11:08 PM | Last Updated : 14th February 2021 11:08 PM | அ+அ அ- |

திருப்புவனத்தில் விடுதியில் தங்கியிருந்தவா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சோ்ந்தவா் ராஜா (49). இவா் வெளிநாட்டுக்கு ஆள் அனுப்பும் முகவராக இருந்து வந்தாா். இதனிடையே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ராஜா கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் திருப்புவனத்தில் தான் தங்கியிருந்த விடுதி அறையில் ராஜா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து திருப்புவனம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.