பொதுமக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கல்
By DIN | Published On : 18th February 2021 11:37 PM | Last Updated : 18th February 2021 11:37 PM | அ+அ அ- |

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள எல்.சிடி.எல். பழனியப்பச் செட்டியாா் நினைவுக் கலையரங்கத்தில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறையின் மூலம் ஒரு முறை வரன் முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் வீடு கட்டி பட்டா இல்லாத குடும்பங்களுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அமைச்சா் ஜி. பாஸ்கரன் கலந்து கொண்டு 532 பேருக்கு ரூ. 1.25 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி பேசினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் க. லதா, மக்களவை முன்னாள் உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பொன். மணி பாஸ்கரன், தேவகோட்டை வருவாய்க் கோட்டாட்சியா் சுரேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) செழியன், வட்டாட்சியா்கள் அந்தோணிராஜ், ஜெயந்தி, திருநாவுக்கரசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.