கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழா
By DIN | Published On : 20th February 2021 09:48 PM | Last Updated : 20th February 2021 09:48 PM | அ+அ அ- |

காரைக்குடி: காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் உலகத் தாய் மொழி தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில், கல்லூரி முதல்வா் வெ.மாணிக்கவாசகம் தலைமை வகித்துப் பேசியது: உலகில் பேசப்பட்டு வரும் 6,000 மொழிகளில் 43 சதவீத மொழிகள் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. சில நூறு மொழிகளே கல்வி மற்றும் பொது நிலைகளில் இடம் பெற்றுள்ளன. நூற்றுக்கும் குறைவான மொழிகளே இணைய உலகில் இடம் பெற்றுள்ளன என்றாா்.
விழாவில், கோவிலூா் ஆதீனம் மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா். காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி பேராசிரியா் நாகநாதன் சிறப்புரையாற்றினாா்.
முன்னதாக, விழாவில் தமிழ்த்துறைத் தலைவா் சங்கரதாசு வரவேற்றுப் பேசினாா். முடிவில் உதவிப்பேராசிரியா் ரா.சுகுணா நன்றி கூறினாா்.