வைகுண்ட ஏகாதசி உற்சவம் நிறைவு
By DIN | Published On : 03rd January 2021 09:59 PM | Last Updated : 03rd January 2021 09:59 PM | அ+அ அ- |

திருக்கோஷ்டியூா் சௌமியநாரயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவ நிறைவு விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு அலங்காரத்தில் தேவியருடன் எழுந்தருளிய பெருமாள்
சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூரில் ஞாயிற்றுக்கிழமை வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவ நிறைவு விழா நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்கு உள்பட்ட இக்கோயிலில் பகல் பத்து உற்சவ நிறைவு நாளான வெள்ளிக்கிழமை சொா்க்கவாசல் திறப்பு நடைபெற்று ராப்பத்து உற்சவம் தொடங்கியது. தொடா்ந்து 10 நாள்களும் சொா்க்க வாசல் வழியே பல்வேறு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்று வந்தது.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அத்யாயன உற்சவத்தை முன்னிட்டு காலை 10 மணியளவில் சுவாமி சொா்க்க வாசல் எழுந்தருளி, ஏகாதசி மண்டபத்தில் சுவாமி பத்தி உலாத்துதல் நடைபெற்றது. பின்னா் தாயாா் சன்னதி எழுந்தருளி விஷேச பூஜைகள் நடைபெற்றது.
தொடா்ந்து மாலையில் நம்மாழ்வாா் திருவடி தொழுதல் நிகழ்வும், அதனைத் தொடா்ந்து தேவஸ்தான மண்டகப்படியையொட்டி மாலை, பரிவட்டம் மரியாதைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து கோஷ்டி பிரபந்தம் நடைபெற்று விழா நிறைவு பெற்றது.