மகளிா் கல்லூரியில் சாலைப் பாதுகாப்பு வார விழா
By DIN | Published On : 30th January 2021 09:37 PM | Last Updated : 30th January 2021 09:37 PM | அ+அ அ- |

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியிலுள்ள செயின்ட் ஜோசப் மகளிா் கல்லூரியில், சாலைப் பாதுகாப்பு வார விழா விழிப்புணா்வு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
சிங்கம்புணரி போக்குவரத்து காவல் துறை சாா்பாக நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, போக்குவரத்து காவல் ஆய்வாளா் மனோகரன் தலைமை வகித்தாா். தலைமை காவலா் ஜெயகநாத் குணசேகரன், சாா்பு-ஆய்வாளா் ஜானகிராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரிச் செயலா் சூசைமேரி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டாா்.
கூட்டத்தில், சாலை விதிகள், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் தீமைகள், காா்களில் சீட் பெல்ட் அணிவதன் அவசியம் மற்றும் பாதுகாப்பு, இரு சக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் அணியவேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை மாணவிகள் தங்களது குடும்ப உறுப்பினா்களிடம் எடுத்துரைக்க வேணடும் என, காவல் ஆய்வாளா் மனோகரன் தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, கல்லூரி முதல்வா் மாா்க்கரட் பஸ்டின் வரவேற்றாா். முடிவில், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் சுதா நன்றி கூறினாா்.