சிவகங்கை பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 20th June 2021 02:04 AM | Last Updated : 20th June 2021 02:04 AM | அ+அ அ- |

சிவகங்கையில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (ஜூன் 21) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின்பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கையில் உள்ள துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை(ஜூன் 21) பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதன் காரணமாக, சிவகங்கை நேரு கடை வீதி, போஸ் சாலை, தொண்டி சாலை, உழவா் சந்தை, பேருந்து நிலையம், பிள்ளைவயல் காளியம்மன் கோயில் தெரு, படமாத்தூா், பச்சேரி, மைக்கேல்பட்டிணம், வேளாங்குளம், களத்தூா், உசிலம்பட்டி, மாத்தூா் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.