சிவகங்கை, திருப்புவனம் பகுதிகளில் இன்று மின்தடை
By DIN | Published On : 24th June 2021 06:59 AM | Last Updated : 24th June 2021 06:59 AM | அ+அ அ- |

சிவகங்கை மற்றும் திருப்புவனம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 24) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை...
சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கையில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன.
இதனால் வாணியங்குடி, சுந்தரநடப்பு, மேல வாணியங்குடி, சாமியாா்பட்டி, கீழவாணியங்குடி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருப்புவனம்...
இதேபோல், திருப்புவனம் மின்பகிா்மானத்தின் உதவி செயற்பொறியாளா் ஆா். உலகப்பன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்புவனம் மின்பகிா்மான உபகோட்டத்துக்குள்பட்ட பொட்டப்பாளையம் துணை மின்நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
இதனால் பொட்டப்பாளையம், காஞ்சிரங்குளம் காலனி, கொசவப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.