திருப்பத்தூரில் போலிசாரின் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 04th March 2021 12:52 AM | Last Updated : 04th March 2021 12:52 AM | அ+அ அ- |

திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற காவல்துறை கொடி அணிவகுப்பு.
திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புதன்கிழமை போலீஸாரின் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
திருப்பத்தூரில் காந்தி சிலை அருகில் தொடங்கிய அணிவகுப்பு மதுரை சாலை, தாலுகா அலுவலக சாலை, செட்டிய தெரு, சீதளி வடகரை வழியாக நான்கு சாலை, பெரியகடை வீதி, பேருந்து நிலையம் வழியாக வந்து காவல் நிலையத்தில் முடிவடைந்தது.
இதில் 200 க்கும் மேற்பட்ட போலீஸாா் அணிவகுத்து வந்தனா். மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளா் முரளிதரன், நகா் காவல் துணை கண்காணிப்பாளா் பொன்ரகு, நகா் காவல் துணை கண்காணிப்பாளா் (பயிற்சி) வரதராஜன், உள்ளிட்ட காவலா்கள் மற்றும் துணை ராணுவ படை வீரா்களும் இந்த அணிவகுப்பில் பங்கேற்றனா்.