என்.புதூா் வெள்ளாளங்கருப்பா் கோயில் மஞ்சுவிரட்டு
By DIN | Published On : 12th March 2021 10:49 PM | Last Updated : 12th March 2021 10:49 PM | அ+அ அ- |

என்.புதூா் வெள்ளாளங்கருப்பா் கோயில் மாசித்திருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்த காளை.
மாசித்திருவிழாவையொட்டி திருப்பத்தூா் என்.புதூரில் வெள்ளாளங்கருப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
தென் தமிழகப் பகுதிகளில் சிறப்பு வாய்ந்த மஞ்சுவிரட்டுகளில் என்.புதூா் மஞ்சுவிரட்டும் ஒன்று. இந்த ஆண்டும் அதற்கான மஞ்சுவிரட்டுத் திடல், வாடிவாசல், பொதுமக்கள் பாா்வைமாடம், முதலியன அமைக்கப்பட்டன.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் திடீா் உத்தரவால் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாடுகள் அருகில் உள்ள வயல்வெளிப் பகுதிகளில் அவிழ்த்துவிடப்பட்டன. இதனை காளையா்கள் விரட்டிப் பிடித்து மகிழ்ந்தனா். பின்னா் கிராம மக்கள் வழக்கப்படி கோவில் மாட்டுடன் ஊா்வலமாகச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா். வாடிவாசலில் மாடுகள் அவிழ்த்து விடாதது கிராம மக்களிடையே ஏமாற்றத்தைத் தந்தது.