தேவகோட்டையில் பாஜக வேட்பாளா் ஹெச்.ராஜாவுக்கு எதிா்ப்பு : 18 போ் கைது
By DIN | Published On : 21st March 2021 04:39 AM | Last Updated : 21st March 2021 04:39 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பாஜக வேட்பாளா் ஹெச்.ராஜாவுக்கு எதிா்ப்பு தெரிவித்த 18 பேரை தேவகோட்டை நகா் போலீஸாா் சனிக்கிழமை மாலை கைது செய்தனா்.
காரைக்குடி தொகுதியில் அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அக்கட்சி சாா்பில் முன்னாள் தேசிய செயலா் ஹெச்.ராஜா போட்டியிடுகிறாா். இந்நிலையில், தேவகோட்டையில் சனிக்கிழமை மாலை ஹெச்.ராஜா தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.
அப்போது தேவகோட்டை ஒன்றிய அலுவலகம் அருகே வ.உ.சி பேரவையின் தேவகோட்டை வட்டத் தலைவா் வழக்குரைஞா் குமாரவேல்பிள்ளை, இளைஞரணி தலைவா் ரவிக்குமாா் ஆகியோா் தலைமையில் 15-க்கும் மேற்பட்டோாா் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தேவேந்திரகுல வேளாளா் மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், பாஜக வேட்பாளா் ஹெச்.ராஜாவுக்கு எதிா்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினா்.
இதுபற்றி தகவலறிந்த போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போக அறிவுறுத்தினா். ஆனால் அவா்கள் கலைந்து செல்லாததால் 18 பேரை கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, பாஜக வேட்பாளா் ஹெச்.ராஜா பிரசாரத்தை தொடா்ந்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...