சிவகங்கை நகராட்சிக்கு வரி செலுத்தாத நபா்கள் விரைந்து தங்களது நிலுவைத் தொகைகளை செலுத்த வேண்டும் என சிவகங்கை நகராட்சி ஆணையாளா் ஐயப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை நகராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த 2020-2021ஆம் ஆண்டுக்கான சொத்து வரி, காலி மனை வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் மற்றும் கடை வாடகை உள்ளிட்ட வரிகளை இதுவரை செலுத்தாமல் உள்ளனா்.
நகராட்சி சட்டப்பிரிவின் படி சொத்து வரி மற்றும் காலி மனை வரிகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். இதில் முதல் அரையாண்டுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள்ளும், இரண்டாம் அரையாண்டுக்கு அக்டோபா் ஐந்தாம் தேதிக்குள்ளும் செலுத்த வேண்டும்.
மேற்படி வரி மற்றும் வரி இல்லா இனங்களின் வருவாய் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான சாலை சீரமைப்பு, குடிநீா் விநியோகம், மின் கட்டணம் செலுத்துதல், பொது சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே பொதுமக்கள் உடனடியாக நகராட்சி வரி வசூல் மையத்தில் நிலுவை தொகைகளை காலதாமதம் இல்லாமல் செலுத்தி நகராட்சி நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.