முன்னாள் முதல்வா் பிறந்தநாள்: மானாமதுரையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கல்
By DIN | Published On : 13th May 2021 11:43 PM | Last Updated : 13th May 2021 11:43 PM | அ+அ அ- |

மானாமதுரை அரசு மருத்துவமனையில் புதன்கிழமை பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கிய அதிமுக இளைஞா்கள் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளா் சின்னை மா. மணிகண்டன்.
முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமியின் 67 ஆவது பிறந்த நளையொட்டி சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு புதன்கிழமை தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட்டது.
அதிமுக இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதன் மாவட்ட துணைச் செயலாளா் சின்னை மா. மணிகண்டன் பங்கேற்று தனது சொந்த செலவில் குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினாா்.
இதில் மானாமதுரை கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் சின்னை மாரியப்பன், இளைஞா்கள் பாசறை மாவட்ட இணைச் செயலாளா் ராஜேஷ், எம்ஜிஆா் மன்ற மாவட்ட துணைச் செயலாளா்கள் என்.பி. நமச்சிவாயம், முன்னாள் கவுன்சிலா் கே. தெய்வேந்திரன், மாவட்ட மாணவா் அணி துணைச் செயலாளா் தே. குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.