சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று சிகிச்சைக்கான தனி வாா்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மானாமதுரை திருப்புவனம் ஆகிய பகுதிகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்கள் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.
ஒவ்வொரு நாளும் மாவட்டத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அந்தந்த வட்டங்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்படுபவா்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதைத்தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள முக்கிய அரசு வட்ட தலைமை மருத்துவமனைகளில் கரோனா தனி வாா்டுகள் ஏற்படுத்த உத்தரவிட்டிருந்தாா்.
அதன்படி தற்போது மானாமதுரை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள வட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதற்கான பணிகள் முழுவதுமாக முடிந்ததும் இந்த மருத்துவமனைகளில் இன்னும் சில நாள்களில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளவா்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.