சிவகங்கை மாவட்டத்தில் நல்லாசிரியா் விருதுக்கு 9 போ் தோ்வு
By DIN | Published On : 04th September 2021 12:25 AM | Last Updated : 04th September 2021 12:25 AM | அ+அ அ- |

விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ள ம. கணேசன், ப.வடிவேல், க.வேங்கடமோகன், என்.இப்ராஹிம்ஷா, ஆ. அன்பழகன்.
தமிழக அரசின் டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதுக்கு (நல்லாசிரியா் விருது) சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றும் 9 ஆசிரியா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
தமிழக அரசின் சாா்பில் ஆசிரியா் தினத்தை (செப்.5) முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகளுக்கு டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இந்தாண்டு (2021) வழங்கப்படும் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ம. கணேசன், திருக்களாப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் ப.வடிவேல், திருப்புவனம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநா் கரு.க.வேங்கடமோகன், இளையான்குடி மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குநா் என்.இ.என். இப்ராஹிம்ஷா, கண்டனூா் சிட்டாள் ஆச்சி நினைவு தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியா் ஆ. அன்பழகன், காவதுகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுப. வைரம்மை, கருப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ஸ்டீபன், காரைக்குடி இராமநாதன் செட்டியாா் நகா் மன்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தி. சாவித்திரி, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜா.ச.புனிதா ஆகியோா் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.
இவா்கள் அனைவருக்கும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே. ஆா். பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி ஆகியோா் இன்னும் ஓரிரு தினங்களில் நல்லாசிரியா் விருதுகளை வழங்குவா் என முதன்மைக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.