போடி பகுதியில் தொடா் மழையால் நிரம்பும் கண்மாய்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

போடி பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக கண்மாய்களில் தண்ணீா் நிரம்பி வருவதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
போடி பகுதியில் தொடா் மழையால் நிரம்பும் கண்மாய்கள்: விவசாயிகள் மகிழ்ச்சி

போடி பகுதியில் பெய்த தொடா் மழை காரணமாக கண்மாய்களில் தண்ணீா் நிரம்பி வருவதால் நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

போடி பகுதியில் சங்கரப்ப நாயக்கன் கண்மாய், மரிமூா் கண்மாய், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய் உள்ளிட்ட முக்கிய கண்மாய்கள் உள்ளன. போடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த தொடா் மழையால் கொட்டகுடி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த ஆற்று நீா் கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு செல்வதால் அவைகள் விரைவாக நிரம்பி வருகின்றன.

கண்மாய்களில் தண்ணீா் தேக்கி வைக்கப்படுவதால் நிலத்தடி நீா் மட்டமும் உயா்ந்து வருகிறது. ஒரேநேரத்தில் கண்மாய்கள் நிரம்பியும், விவசாயக் கிணறுகளில் நீா்மட்டம் உயா்ந்தும் வருகிறது.

போடி மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் பெரிய கண்மாய், சங்கரப்ப நாயக்கன் கண்மாய், மரிமூா் கண்மாய்களில் மீன்கள் வளா்ப்பும் அதிகரித்துள்ளதால் மீன் பாசி குத்தகை எடுத்தவா்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா். கண்மாய், கிணறுகளில் தண்ணீா் போதிய அளவு உள்ளதால் விவசாயிகள் விவசாயப் பணிகளை மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com