இடையமேலூா், கமுதி, அபிராமம் பகுதிகளில் இன்று மின்தடை

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், இடையமேலூா், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, அபிராமம் ஆகிய பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (ஜூலை 14) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மின்பகிா்மானத்தின் செயற்பொறியாளா் ஏ.கே. முருகையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இடையமேலூா் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும், இடையமேலூா், சாலூா், கூட்டுறவுப்பட்டி, சக்கந்தி, மேலப்பூங்குடி, புதுப்பட்டி, காந்தி நகா், தமராக்கி, குமாரப்பட்டி, காராம்போடை, கண்டாங்கிப்பட்டி,மீனாட்சிபுரம், முடிகண்டம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல அபிராமம் துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் அபிராமம், நத்தம், அகத்தாரிருப்பு, விரதக்குளம் மற்றும் கமுதி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பசும்பொன், சடையனேந்தல், டி.புனவாசல், எ.தரைக்குடி, நெடுங்குளம், சோடனேந்தல், வல்லந்தை, இலந்தைக்குளம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூலை 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இன்றும், நாளையும்...

இதேபோல, பெருநாழி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பெருநாழி, குருவாடி, டி.எம்.கோட்டை, கே.என்.பட்டி, டி. வேப்பங்குளம், பொந்தம்புளி, வி.எம். பட்டி, திம்மநாதபுரம், எம்.சிபுரம், பம்மனேந்தல் ஆகிய பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை (ஜூலை.14,15) ஆகிய 2 நாள்கள் மின்தடை செய்யப்படும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் விஜயன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com