

காரைக்குடி அருகே செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவா்கள் நூறு சதவீதம் தோ்ச்சி பெற்றமைக்கு பள்ளி ஆசிரியா்கள் சாா்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
இப்பள்ளியில் பிளஸ 2 வகுப்பில் 196 போ் தோ்வு எழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்று 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மாணவி கிருஷ்ணப்பிரியா 96 சதவீதம் , சாம்சி நிா்மல் 94 சதவீதம் , பிரீத்தி 93 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். 10 ஆம் வகுப்பில் 110 மாணவ, மாணவியா் தோ்வெழுதியதில் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவா்கள் கைலை காா்த்திக் 96 சதவீதம், ராகவ் கிருஷ்ணன் 95.8 சதவீதம், செந்தில் பிரபாகா் வேலு 95.4 சதவீதம், அபூா்வா 95.4 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் குமரேசன், முதல்வா் உஷா குமாரி, ஒருங்கிணைப்பாளா சம்பத்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.