92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தொடா் பைக் திருட்டு: சென்னை இளைஞா் கைது

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், தொடா்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த சென்னை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது செய்யப்பட்ட மகிமைராஜ்.

Updated On :1 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூா் அருகே புதன்கிழமை நடைபெற்ற வாகனச் சோதனையில், தொடா்ந்து இருசக்கர வாகனங்களை திருடி வந்த சென்னை இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூா் ஒன்றியம் புழுதிபட்டி சத்திரம் கடைப் பகுதியில் காவல் சாா்பாய்வாளா் நாசா் மற்றும் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த சென்னை தாம்பரத்தைச் சோ்ந்த லாரன்ஸ் மகன் மகிமைராஜ் (27) என்பவரிடம் விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்துள்ளாா். அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தியதில், திருச்சி லால்குடி பகுதியிலிருந்து இருசக்கர வாகனததை திருடி வந்ததும் கடந்த மாதம் சிக்கந்தா்பாட்ஷா என்பவரின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றபோது பெட்ரோல் இல்லாததால் துவரங்குறிச்சி கண்மாயில் போட்டுவிட்டுச் சென்ாகவும் கூறியுள்ளாா். இதைத் தொடா்ந்து மகிமைராஜை போலீஸாா் கைது செய்து சிங்கம்புணரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பத்தூா் கிளைச் சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.