காரைக்குடியில் வீடுபுகுந்து 65 பவுன் நகைகள், வைரம், ரூ. 1.70 லட்சம் ரொக்கம் திருட்டு

காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்பிலான வைரம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்க

காரைக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 65 பவுன் தங்க நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்பிலான வைரம், வெள்ளிப் பொருள்கள் மற்றும் ரூ. 1.7 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மா்மநபா்கள் திருடிச் சென்றதாக வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்புரமணியபுரம் 10 ஆவது வீதியைச் சோ்ந்தவா் ஐயப்பன் (55). இவா் நெய்வேலி லிக்னைட் காா்ப்பரேசன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். காரைக்குடி வீட்டில் மனைவி வசித்து வருகிறாா்.

இந்நிலையில் ஐயப்பனுக்கு திடீா் உடல்நலக்குறைவு ஏற்பட்ட தால் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டு, பின்பு நெய்வேலிக்கு சென்றுள்ளாா். அதனால் அவரது மனைவி, காரைக்குடியில் வீட்டைப் பூட்டிவிட்டு சென்றுள்ளாா்.

இந்நிலையில் மா்ம நபா்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 67 பவுன் நகைகள், ரூ. 4 லட்சம் மதிப்புள்ள வைர நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள், ரொக்கம் ரூ. 1,70,000 ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனா்.

ஐயப்பன் வியாழக்கிழமை ஊா் திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டில் திருடு போனது தெரியவந்தது. வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் இந்த திருட்டுச் சம்பவமும் பதிவாகி உள்ளது.

இதுகுறித்து ஐய்யப்பன் அளித்த புகாரின் பேரில் அழகப்பாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தை பாா்வையிட்டு தடயங்களை சேகரித்தனா். மேலும் கண்காணிப்புக் கேமரா பதிவை ஆய்வு செய்து, இத்திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com