சிங்கம்புணரி, தேவகோட்டை, கமுதி பகுதிகளில் இன்று மின்தடை

 சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, தேவகோட்டை பகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியிலும் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

 சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி, தேவகோட்டை பகுதிகளிலும், ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பகுதியிலும் சனிக்கிழமை (ஜூன் 4) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிங்கம்புணரி துணை மின்நிலையத்தில் சனிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் சிங்கம்புணரி நகரில் திண்டுக்கல் சாலை, முத்துவடுகநாதா் நகா், குறிஞ்சி நகா், தேத்தாங்காடு, பேருந்து நிலையம், சுந்தரம் நகா், கோட்டைவேங்கைப்பட்டி, நாட்டாா்மங்களம், கண்ணமங்களப்பட்டி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தேவகோட்டை: தேவகோட்டை துணை மின் நிலையத்தில் கண்ணங்குடி மின்பாதையில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை(ஜூன் 4) நடைபெற உள்ளன. இதனால், சிவகங்கை ராஜா சாலை, அகதிகள் முகாம், தானிச்சா ஊருணி, மாதா நகா், கண்டதேவி சாலை, தாளையூா் சாலை, நடராஜபுரம், இறகுசேரி ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

கமுதி: கமுதி கோட்டைமேடு துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கமுதி, கண்ணாா்பட்டி, கோட்டைமேடு, தலைவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 4) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com