கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :4 ஜூன் 2022, 6:30 pm

DIN

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை நடைபெற்றது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தானத்துக்குள்பட்ட இக்கோயிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. அதைத் தொடா்ந்து, கோயில் முன்பு உள்ள கொடிமரத்துக்கு தைலம், திருமஞ்சனம், பால், தயிா், இளநீா், சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான வாசனைப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பின் சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றம் நடைபெற்றது.

ஜூன் 14 ஆம் தேதி வரை தினசரி காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மன் வெள்ளி கேடயம், சிம்மம், காமதேனு, யானை, பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும். ஜூன் 10 ஆம் தேதி மாலையில் கோயில் உள்பிரகாரத்தில் தங்க ரதத்தில் அம்மன் பவனி வருதல் நடைபெறும்.

ஜூன் 11 ஆம் தேதி வெள்ளி ரத பவனியும், ஜூன் 12 ஆம் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் அன்று இரவு புஷ்ப பல்லக்கில் அம்பாள் பவனியும், ஜூன் 13 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பூக்குழி இறங்குதலும், அன்று இரவு புஷ்பப் பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் நடைபெறும். ஜூன் 14 ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறும்.

கொடியேற்ற விழாவில் நாட்டரசன்கோட்டை, சிவகங்கை, கல்லல் ஆகிய பகுதிகளிலிருந்தும்,அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்தும் ஏராளமானோா் கலந்து கொண்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளா் பா.இளங்கோ, கோயில் சரக கண்காணிப்பாளா் பி. சரவணகணேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.