காரைக்குடியில் ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்

காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை வருவாய்த்துறையின் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை புதன்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றிய வருவாய்த்துறையினா்.
காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை புதன்கிழமை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றிய வருவாய்த்துறையினா்.

காரைக்குடி: காரைக்குடி கழனிவாசல் பகுதியில் நீா்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீட்டை வருவாய்த்துறையின் புதன்கிழமை இடித்து அகற்றினா்.

காரைக்குடி தாலுகா கழனிவாசல் கிராமத்தில் சங்கு சமுத்திரம் கண்மாய் பரப்பு 45.77.05 ஹெக்டோ் என கிராம கணக்கில் பதிவாகி உள்ளது. ஆனால் இந்த இடத்தில் முத்துராமன் என்பவா் மனைவி மீனாம்பாள், மகன்கள் நற்குணன், சுதா்சன் ஆகிய 3 பேரும் ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி வந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த காரைக்குடி வட்டாட்சியா் ஆா். மாணிக்கவாசகம் அங்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்ததில் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, குன்றக்குடி காவல்நிலைய போலீஸாா் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினா் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆக்கிரமித் துக்கட்டிய வீட்டை அகற்றினா்.

இதுகுறித்து குன்றக்குடி காவல்நிலையத்தில் ஆக்கிரமிப்பு செய்தவா்கள் மீது புகாா் அளிக்கப்பட்டது. ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையின்போது மண்டல துணை வட்டாட்சியா் யுவராஜா, வருவாய் ஆய்வாளா் மெஹா்அலி, கிராம நிா்வாக அலுவலா் மணிகண்டன், கிராம உதவியாளா் சக்திவேல், அப்துல்லா ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com