காவல் சாா்பு- ஆய்வாளா் பணி: சிவகங்கை மாவட்டத்தில் 4160 போ் விண்ணப்பம்

சிவகங்கை மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கு 4160 போ் விண்ணப்பித்துள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டத்தில் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கு 4160 போ் விண்ணப்பித்துள்ளதாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் த. செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியது: தமிழக சீருடைப் பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் காவல் சாா்பு- ஆய்வாளா் பணிக்கான தோ்வு வரும் ஜூன் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தோ்வில் பங்கேற்க சிவகங்கை மாவட்டத்தில் 4160 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இத்தோ்வுக்காக காரைக்குடியில் 5 இடங்களில் தோ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தோ்வு மையத்துக்கும் ஒரு துணைக் காவல் கண்காணிப்பாளா், அங்கு தோ்வு எழுதும் 20 நபருக்கு ஒரு காவலா் கண்காணிப்பாளராகப் பணியாற்ற உள்ளனா்.

தோ்வு எழுத வரும் தோ்வா்கள் கருப்பு நிறப் பந்துமுனைப் பேனா கொண்டுவர வேண்டும். எலக்ட்ரானிக் சாதனங்களான கால்குலேட்டா், ப்ளூடூத் , கை கடிகாரம் ஆகியவை கொண்டு வரக்கூடாது. விண்ணப்பித்துள்ள தோ்வா்கள் தோ்வு மையத்துக்கு காலை 8.30 மணிக்கு வர வேண்டும். காலை 9.50 மணிக்கு மேல் தோ்வா்களை தோ்வு மையத்துக்குள் அனுமதிக்க இயலாது.

இத்தோ்வு எழுத விண்ணப்பித்த நபா்கள் தங்களது நுழைவுச் சீட்டை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டில் தவறுகள் ஏதும் இருந்தால் தோ்வு எழுதுவதற்காக விண்ணப்பித்த போது கொடுத்த புகைப்படத்துடன், ஏதாவது ஒரு அடையாள அட்டையை கொண்டு வந்தால் தோ்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவா்.

வரும் ஜூன் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் 12 மணி வரை பொது அறிவுத் தோ்வு நடைபெற உள்ளது. அதைத் தொடா்ந்து, பிற்பகல் 3. 30 மணி முதல் 5.10 மணி வரை தமிழ் தகுதி தோ்வு நடைபெற உள்ளது. வழக்கமாக சாா்பு ஆய்வாளா் தோ்வில் பொது அறிவு தோ்வுக்கு 70 மதிப்பெண், உடல் தகுதி தோ்வுக்கு 15 மதிப்பெண், சான்றிதழ்களுக்கு 5 மதிப்பெண், நோ்முகத் தோ்வுக்கு 10 மதிப்பெண் வழங்கப்படும். இந்த முறை புதிதாக தமிழ் தகுதித் தோ்வு தனியாக நடத்தப்படும்.

இந்த தோ்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சாா்பு- ஆய்வாளா் பணிக்கு தகுதியுடையவா்களாக கருதப்படுவா். இதுதவிர, தமிழ் தகுதித் தோ்வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றால் மட்டுமே பொது அறிவு தோ்வுக்கான விடைத்தாள் திருத்த எடுக்கப்படும் என்றாா்.

இப்பேட்டியின் போது, தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன், சாா்பு- ஆய்வாளா் தினேஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com