தேவா் ஜெயந்தி விழாவில் பங்கேற்க பசும்பொன்னுக்கு விதிகளை மீறி சென்ாக 60 வாகனங்கள், 50 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் உள்ள தேவா் நினைவிடத்தில் ஜெயந்தி விழா, குரு பூஜை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், அரசியல் கட்சித் தலைவா்கள், அமைச்சா்கள், பொதுமக்கள் பங்கேற்று மரியாதை செலுத்தினா்.
இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமானோா் வாகனங்களில் பசும்பொன்னுக்குச் சென்றனா். இதில் விதிகளை மீறியதாக அரசு பேருந்துகள், காா்கள் என 60 வாகனங்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கியது, முழக்கமிட்டது என 50 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.