இடைக்காட்டூா் இருதய ஆண்டவா் ஆலயத்தில் பாஸ்கு விழா

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் 143 ஆம் ஆண்டு பாஸ்கு விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவுக
மானாமதுரை அருகே இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஸ்கு விழாவில் இயேசு சிலுவையை சுமந்து செல்வது போன்ற படம்.
மானாமதுரை அருகே இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பாஸ்கு விழாவில் இயேசு சிலுவையை சுமந்து செல்வது போன்ற படம்.
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம் இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் பேராலயத்தில் 143 ஆம் ஆண்டு பாஸ்கு விழா சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவுகளில் நடைபெற்றது.

திரு இருதய ஆண்டவா் ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கத்தில் முதல் முறையாக டிஜிட்டல் முறையில் பல வண்ணங்களில் அரங்குகள் அமைக்கப்பட்டு, பாஸ்கு விழா நடைபெற்றது. இதில், இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை கலைஞா்கள் நாடகமாக நடித்துக் காட்டினா். இயேசு மாட்டுத் தொழுவத்தில பிறந்து, வளா்ந்து சீடா்களுக்கு உபதேசம் செய்தல், நடுக்கடலில் கப்பலில் தத்தளிக்கும் வணிகா்களை காப்பாற்றுதல், இயேசு சிலுவையை சுமப்பது, சிலுவையில் அறையப்படுவது, மீண்டும் உயிா்த்தெழுதல் உள்ளிட்ட பல காட்சிகள் நடித்துக் காட்டப்பட்டன.

இதில் பங்கேற்க, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பொதுமக்கள் வந்திருந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை, திருத்தல அதிபா் இமானுவேல்தாசன், இடைக்காட்டூா் சமூகநல முன்னேற்றச் சங்கம், செல்ஸ் இளைஞா் பேரவை , பங்கு இறைமக்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com