இளையான்குடியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு: வீடுகள், கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் 

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே பொது மக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பேருந்து நிலையம்
இளையான்குடியில் வீடுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்த கருப்புக்கொடி.
இளையான்குடியில் வீடுகளுக்கு முன்னர் கட்டப்பட்டிருந்த கருப்புக்கொடி.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் ஊருக்கு வெளியே பொது மக்களுக்கு பயன் தராத வகையில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுவதை எதிர்த்து சனிக்கிழமை வீடுகள் மற்றும் கடைகளில் கருப்புக்கொடி ஏற்றி வைக்கும் போராட்டம் நடத்தப்பட்டது. 

இளையான்குடியில் ஊருக்கு வெளியே 3 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க கடந்த மார்ச் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. பொது மக்களுக்கு பயன்தராத வகையில் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க கூடாது. இளையான்குடியில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். 

இக்கோரிக்கையை வலியுறுத்தி முதல் கட்டமாக இளையான்குடியில் கடையடைப்பு போராட்டமும், இரண்டாவது கட்டமாக தமிழக முதல்வருக்கு ஐந்தாயிரம் தபால்கள் அனுப்பும் போராட்டமும் நடத்தப்பட்டது. புதிய பேருந்து நிலையம் எதிர்ப்பு குழு சார்பில் போராட்டங்கள் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. 

மூன்றாவது கட்ட போராட்டமாக இளையான்குடி பகுதியில் அனைத்து வீடுகளிலும், வியாபாரக் கடைகளிலும் ஊருக்கு வெளியே புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்பட்டது. 

இதையடுத்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு முன்னர் பொதுமக்கள், வியாபாரிகள் கருப்புக் கொடிகளை கட்டி வைத்தனர். கருப்புக்கொடி ஏற்றி வைக்கும் போராட்டத்தில் இளையான்குடி புதிய பேருந்து நிலைய எதிர்ப்பு குழு தலைவர் பொறியாளர் சைபுல்லாக், செயலாளர் துருக்கி ரபீக்ராஜா, பொருளாளர் நாகூர் மீரா மற்றும் உறுப்பினர்கள் பசீர், அசிஸ், ரபிக், கார்த்திக், சதாம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com