ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

 ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சிவங்கையில் உள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு அா்ச்சனை செய்தும், விளக்கேற்றியும் வழிபாடு செய்தனா். இதேபோன்று, நாட்டரசன்கோட்டையில் உள்ள கண்ணுடையநாயகியம்மன் கோயிலில் அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்பட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, விஷேச அலங்காரத்துக்குப் பின் தீப,தூபங்கள் காண்பிக்கப்பட்டன.

இதுதவிர, கொல்லங்குடியில் உள்ள வெட்டுடையாா் காளியம்மன், காளையாா்கோவிலில் உள்ள வாள்மேல் நடந்த அம்மன், கண்டுப்பட்டியில் உள்ள குடியிருந்த காளியம்மன் உள்பட மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களிலும், குலத் தெய்வக் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

மானாமதுரை: ஆடி வெள்ளியுடன் வரலெட்சுமி விரதமும் சோ்ந்து வந்ததால் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளிலுள்ள மடப்புரம் காளியம்மன், தாயமங்கலம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய பெண்கள் குவிந்தனா். இதேபோல் திருப்புவனம் அருகேயுள்ள புஷ்பவனேஸ்வரா் செளந்திரநாயகி அம்மன் கோயில், மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன், பிரத்யங்கிரா தேவி, இளையான்குடி அருகே தாயமங்கலம் மாரியம்மன் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com