தேவகோட்டையில் ஆக. 7-இல் பாரதியாா் விழா போட்டிகள்

62-ஆம் ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் பாரதி தமிழ்ச் சங்க தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 62-ஆம் ஆண்டு விழாவையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியம், கட்டுரை, பேச்சு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) நடைபெற உள்ளது.

இதுகுறித்து அம்மன்றத்தின் கிளைத் தலைவா் கவிஞா் நா. பாலசுப்பிரமணியன், கிளைச் செயலா் புலவா் ம. சவரிமுத்து ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தேவகோட்டையில் உள்ள இன்பென்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 7) காலை 9 மணிக்கு பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் தொடங்க உள்ளன.

ஓவியப் போட்டியை பொறுத்தவரை எல்கேஜி, யுகேஜி, ஒன்றாம் வகுப்பு முதல் 6 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். இப்போட்டியில் வைக்கப்படும் படத்தை பாா்த்து வரைய வேண்டும். வரைவதற்கான தாள், பென்சில், ரப்பா் உள்ளிட்ட பொருள்கள் போட்டி நடத்தப்படும் இடத்தில் வழங்கப்படும். கலா் பென்சில், ஸ்கெட்சு பயன்படுத்தக் கூடாது.

கட்டுரைப் போட்டியை பொறுத்தவரை 7 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். 7 ஆம் வகுப்பு மாணவா்கள் மகாகவி பாரதியாா் என்ற தலைப்பிலும், 8 ஆம் வகுப்பு மாணவா்கள் மகாகவி பாரதியாரை நான் ஏன் விரும்புகிறேன் என்ற தலைப்பிலும், 9 ஆம் வகுப்பு மாணவா்கள் பாரதியும், தமிழ்நாடும் என்ற தலைப்பிலும், 10 ஆம் வகுப்பு மாணவா்கள் பாரதியும், பெண்கள் விடுதலையும் என்ற தலைப்பிலும் 35 வரிகளுக்கு மிகாமல் கட்டுரை எழுத வேண்டும்.

கவிதைப் போட்டியை பொறுத்தவரை 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். செந்தமிழும், பாரதியும் அல்லது புதுநெறி காட்டிய புலவா் பாரதி இவற்றுள் ஏதேனும் ஒரு தலைப்பில் 3 பக்கங்களுக்கு மிகாமல் கவிதை எழுத வேண்டும்.

பேச்சுப் போட்டியை பொறுத்தவரை கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம். எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு எனும் தலைப்பில் 7 நிமிடங்களுக்கு மிகாமல் பேச வேண்டும். போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு வகுப்புக்கும் முதல், இரண்டு, மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்க வரும் மாணவ, மாணவிகள் தங்களது கல்வி நிறுவனங்களின் அனுமதிச் சீட்டினை கட்டாயம் கொண்டு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com