திருப்பத்தூரில் மத நல்லிணக்க விழா
By DIN | Published On : 05th August 2022 12:00 AM | Last Updated : 05th August 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் புஷ்ப வியாபாரிகள் சங்கம் சாா்பில் மதநல்லிணக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக பெரிய கடை வீதிப் பகுதியில் கூடிய இந்துக்களும், இஸ்லாமியா்களும் குடத்தில் பால் மற்றும் மஞ்சள் நிரப்பி அக்குடத்திற்கு கொடி சுற்றி துவாஆ செய்யப்பட்டது. பின்னா் சந்தனக்குடம் சுமந்து ஊா்வலமாக பேருந்துநிலையம், பெரியகடைவீதி வழியாக புதுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள கான்பா பள்ளிவாசலை அவா்கள் வந்தடைந்தனா்.
அங்கு கொடியேற்றப்பட்டு, கோரியில் பச்சை கம்பளம் விரிக்கப்பட்டு, சந்தனம் தெளித்து சிறப்பு தொழுகை நடத்தினா். விழா ஏற்பாடுகளை புஷ்ப வியாபாரிகள் சங்கத்தினா் செய்திருந்தனா்.