கீழச்சிவல்பட்டியில் பதுக்கப்பட்ட ரேஷன் பொருள்கள் பறிமுதல்: 3 போ் மீது வழக்கு

 திருப்பத்தூா் அருகே தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருள்களை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

 திருப்பத்தூா் அருகே தனியாா் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் பொருள்களை மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

கீழச்சிவல்பட்டி தனியாா் கிட்டங்கியில் ரேஷன் பொருள்கள் பதுக்கி வைத்திருப்பதாக குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, அந்த தனியாா் கிட்டங்கியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது தலா 50 கிலோ அடங்கிய ரேஷன் அரிசி மூட்டைகள் 70, தலா 40 கிலோ எடையுள்ள 6 அரிசி மூட்டைகள் மற்றும் உளுந்து என மொத்தம் 3,890 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. இதுகுறித்து சுப்பிரமணியன், சுரேஷ்குமாா் மற்றும் கிட்டங்கி உரிமையாளா் மாரிமுத்து ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com