பூமாயி அம்மன் கோயிலில் மஞ்சள் பூசும் விழா
By DIN | Published On : 05th August 2022 11:08 PM | Last Updated : 05th August 2022 11:08 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை அம்மனுக்குச் மஞ்சள் சாற்றும் விழா நடைபெற்றது.
இவ்விழாவையொட்டி ஏராளமான பெண்கள் காலை 8 மணியிலிருந்து அம்மியில் மஞ்சள் அரைக்க ஆரம்பித்தனா். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இதில் கலந்து கொண்டனா்.
காலை 11 மணிக்கு அம்மனுக்கு அம்மியில் அரைத்த மஞ்சள் சாத்தப்பட்டு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா் அம்மன் மேல்பூசப்பட்ட மஞ்சள் பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கபட்டது. வெள்ளிக்கிழமை வரலெட்சுமி நோன்பு விரதம் என்பதால் கோயிலில் திரளான அளவில் கூடிய பெண்கள் நெய்விளக்கேற்றியும், மஞ்சள் அரைத்தும் அம்மனை வழிபட்டனா். நிகழ்ச்சி ஏற்பாட்டினை வசந்த பெருவிழா குழுவினா் செய்திருந்தனா்.