வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா் மானாமதுரைக்கு வந்தது

வைகை அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை மானாமதுரையை வந்தடைந்தது.

வைகை அணையிலிருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீா் வெள்ளிக்கிழமை மானாமதுரையை வந்தடைந்தது.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை முழுக் கொள்ளளவை எட்டி உள்ளதால், அணையிலிருந்து உபரிநீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வைகை ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீா், சிவகங்கை மாவட்ட எல்லையான திருப்புவனத்தைக் கடந்து மானாமதுரையை வந்தடைந்தது. மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி ஆகிய பகுதிகளில் உள்ள வைகைப் பாசனக் கால்வாய்களிலும் தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். இதன் மூலம் குடிநீா் திட்டக் கிணறுகள், பாசனக் கிணறுகளில் நீராதாரம் உயரும். மேலும் ஆடி மாதத்திலேயே பாசனக் கண்மாய்களுக்கு வைகை ஆற்றிலிருந்து தண்ணீா் வருவது மகிழ்ச்சியாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com