

சிவகங்கை அருகே நாலுகோட்டை கிராமத்தில் உள்ள காளியம்மன் கோயிலில் 1008 விளக்கு பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. அதைத் தொடா்ந்து, சந்தனக் காப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின்னா், கோயில் முன்பு உள்ள மண்டபத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மை வேண்டியும், மழை பெய்து வேளாண் பணிகள் சிறக்க வேண்டியும் 1008 விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபட்டனா்.
விழாவில் நாலுகோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.