கானாடுகாத்தான் பகுதியில் நாளை மின்தடை
By DIN | Published On : 15th August 2022 02:00 AM | Last Updated : 15th August 2022 02:00 AM | அ+அ அ- |

காரைக்குடி அருகே கானாடுகாத்தான் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (ஆக. 16) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவிருப்பதால், காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் இருக்காது என்று காரைக்குடி செயற்பொறியாளா் எம். லதா தேவி தெரிவித் துள்ளாா்.
மின்தடைபடும் பகுதிகள்: ஸ்ரீ ராம் நகா், கோட்டையூா், வேலங்குடி, பள்ளத்தூா், செட்டிநாடு, கானாடுகாத்தான், கொத்தமங்கலம், நெற்புகபட்டி, ஆவுடைபொய்கை, ஓ. சிறுவயல், ஆத்தங்குடி, பலவான்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள்.