குரூப் 1 தோ்வுக்கு இலவசப் பயிற்சி
By DIN | Published On : 24th August 2022 12:00 AM | Last Updated : 24th August 2022 12:00 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் குரூப் 1 தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள் இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் சேர 04575-240435 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாள்களில் தொடா்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...