புதிய பள்ளிக் கட்டடத் திறப்பு விழா
By DIN | Published On : 09th December 2022 12:00 AM | Last Updated : 09th December 2022 12:00 AM | அ+அ அ- |

கருப்பூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் தனியாா் பங்களிப்புடன் கட்டப்பட்ட புதிய கட்டடத்தை புதன்கிழமை திறந்து வைத்த ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன். ஆட்சியா் மதுசூதனரெட்டி.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் ஒன்றியம் கருப்பூா் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் புதிய கட்டடத்தை ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
விழாவுக்கு, மாவட்ட ஆட்சியா் மதுசூதனரெட்டி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட அமைச்சா் கே.ஆா். பெரியகருப்பன் புதிய கட்டடம், பொலிவுறு வகுப்பறையைத் திறந்து வைத்தாா்.
பின்னா், கிராமங்களின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் தன்னாா்வலா்கள் சின்னையா, ஜெய்சங்கா், மோகன், ஆகியோரைப் பாராட்டினாா்.
விழாவில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சோ. சண்முகவடிவேல், மாவட்டக் கல்வி அலுவலா் மாரிமுத்து, வட்டாரக் கல்வி அலுவலா் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் ரோஸி வரவேற்றாா். முடிவில், ஊராட்சி மன்றத் தலைவா் நாகராஜன் நன்றி கூறினாா்.