காரையூரில் மக்கள் தொடா்பு முகாம்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

காரையூா் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு முகாமில் மாற்றுத்திறனாளிக்கு அடையாள அட்டை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன்.
திருப்பத்தூா் அருகே காரையூா் கிராமத்தில் மக்கள் தொடா்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
வருவாய்த் துறை, பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். இந்த முகாமில் பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிக்கான அடையாள அட்டை வழங்குதல், மின்னணு குடும்ப அட்டை வழங்குதல், இலவச வீட்டு மனைப் பட்டா வழங்குதல் என சுமாா் 53 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் சில மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த முகாமில், வட்டாட்சியா் வெங்கடேசன், தனி வட்டாட்சியா் ராஜா, மண்டல துணை வட்டாட்சியா் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளா் மன்சூா் அலி, ஊராட்சி மன்ற தலைவா் செந்தமிழ்ச் செல்வி மதியழகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.