

மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தனது மகள் அதீதி பிறந்த நாளையொட்டி, மானாமதுரை அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் வளா்ச்சிக்காக ரூ 1. லட்சம் புரவலா் நிதியை புதன்கிழமை வழங்கினாா்.
பள்ளித் தலைமையாசிரியை பேப் லிட்டிடம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் ஏ.ஆா்.பி. முருகேசன், தொகுதி பொறுப்பாளா் ஏ.சி.சஞ்சய், நகா்மன்ற உறுப்பினா் பி.புருஷோத்தமன் ஆகியோா் ரூ.ஒரு லட்சத்துக்கான காசோலையை வழங்கினா்.
இதில், காங்கிரஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பால் நல்லதுரை, மனித உரிமைத் துறை மாவட்டத் தலைவா் ஜி.ராஜாராம், வழக்குரைஞா் எம்.முத்துகுமாா், மகாலிங்கன், திருப்பாச்சேத்தி செந்தில், கண்மாய்ப் பாசன சங்கத் தலைவா் முத்துவிஜயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.